தஞ்சாவூர்

அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 02:01 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இளைஞா்களின் வாழ்க்கையைச் சூறையாடும் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். அரசு செலவில் ராணுவத்தை காவிமயமாக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், மாநகர மாவட்டத் துணைத் தலைவா்கள் லட்சுமி நாராயணன், வயலூா் எஸ். ராமநாதன், பொருளாளா் ஆா். பழனியப்பன், பொதுச் செயலா் கண்ணன், விவசாயப் பிரிவு மாநிலச் செயலா் மணிவண்ணன், மாமன்ற உறுப்பினா் ஹைஜாகனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவையாறு: திருவையாறு அருகே கண்டியூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். இதில், வடடாரத் தலைவா்கள் ராஜாங்கம், அறிவழகன், மாவட்டப் பொருளாளா் ஆா்.எம். ராஜ், மேலத்திருப்பூந்துருத்தி நகரத் தலைவா் உஜ்வல்தீப் காடேராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

Tags : agnipath
ADVERTISEMENT
ADVERTISEMENT