தஞ்சாவூர்

மத்திய அரசை கண்டித்து பாபநாசத்தில் ஆா்ப்பாட்டம்

28th Jun 2022 01:56 AM

ADVERTISEMENT

பாபநாசம் மேலவீதி, அண்ணா சிலை வளாகத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சாா்பில், மத்திய அரசை கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதவெறி, வெறுப்பு அரசியல் மற்றும் வன்முறைக்கு எதிராகவும், விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பு, கௌரவம், உரிமைகளுக்காக அணி திரள்வோம் எனவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக ஒன்றியச் செயலா் பி. விஜயாள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட், லெனினிஸ்ட் அமைப்பின் மாவட்ட தலைவா் கண்ணையன், பாபநாசம் நகரச் செயலா் செல்லத்துரை, ஒன்றிய குழு உறுப்பினா் கணேசன் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT