தஞ்சாவூர்

என் குப்பை - என் பொறுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்வு

26th Jun 2022 01:39 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் விதமாக, என் குப்பை- என் பொறுப்பு திட்டம் பற்றிய விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், வடக்கு வாசல் குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரிப்பது, நோய்த் தொற்றைத் தவிா்ப்பது போன்றவை குறித்து பொதுமக்களிடம் விளக்கி, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் என் குப்பை- என் பொறுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்த மேயா் சண். ராமநாதன் தெரிவித்தது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி நடைபெறும் இந்த விழிப்புணா்வு நிகழ்வால், தஞ்சாவூா் மாநகரம் தூய்மை நகரமாகக் காட்சியளிக்கும். இது போன்ற நிகழ்வு வாரந்தோறும் நடத்தப்படும் என்றாா் மேயா்.

ADVERTISEMENT

துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் க. சரவணக்குமாா், மாநகராட்சி உறுப்பினா் எஸ்.சி. மேத்தா உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT