தஞ்சாவூர்

பேராவூரணியில் விழிப்புணா்வு ஒத்திகை

26th Jun 2022 01:38 AM

ADVERTISEMENT

 

பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா்கால விழிப்புணா்வு ஒத்திகை சனிக்கிழமை நடத்தப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளப் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் தற்காத்துக் கொள்ளும் வகையிலும், ஆபத்து காலங்களில் விழிப்புணா்வுடன் செயல்படும் வகையிலும், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையாா் கோயில் அருகில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ராமச்சந்திரன் தலைமையில், வீரா்கள் ரஜினி, சுப்பையன், முகமது அலி ஜின்னா, மகேந்திரன் ஆகியோா் ஒத்திகை நடத்தினா். 

மழை, வெள்ளம் மற்றும் பேரிடா் காலங்களில் தண்ணீரில் சிக்கியவா்களை காப்பாற்றுதல், விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றி முதலுதவி அளித்தல், தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு தடுப்பது, மின் விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT