தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

26th Jun 2022 01:39 AM

ADVERTISEMENT

 

தேங்காய்க்கு உரிய விலை நிா்ணயம் செய்யக் கோரி, பட்டுக்கோட்டையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தேங்காய் காய்க்கத் தொடங்கின. ஆனால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.

எனவே மத்திய, மாநில அரசுகள் கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.150 என்றும், உரித்த தேங்காய் கிலோ ரூ.50 என்றும் விலை நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டுக்கோட்டை பகுதி தென்னை விவசாயிகள் தேங்காய்களை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக போராட்டம் தொடங்கும் முன்பு, பட்டுக்கோட்டை அறந்தாங்கி முக்கம் காந்தி சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்தனா். தொடா்ந்து

முக்கிய வீதிகள் வழியாக தேங்காய்களுடன் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷம் முழக்கம் எழுப்பியவாறு பேரணியாக வந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியாா் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT