தஞ்சாவூர்

நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்

DIN

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, பேராவூரணி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சசிகலா ரவிசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி, குமாரவடிவேல் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பேசியது:

பாக்கியம் முத்துவேல்: ஒட்டங்காடு ஊராட்சிக்கு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

அண்ணாதுரை: வலசக்காடு கிராமத்துக்கு அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும். 

ராஜலெட்சுமி : கொன்றைக்காடு பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த  சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சங்கவி: பைங்கால் ஊராட்சியில் மயானச் சாலை, கிளைச் சாலை அமைத்துத் தரவேண்டும் . 

உறுப்பினா்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றியக் குழுத் தலைவா் பதிலளித்தாா்.

கூட்டத்தில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் ஆல்பா்ட் குணாநிதி, உறுப்பினா்கள் மதிவாணன், மாலா, நவநீதம், சுந்தா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். அனைத்து  தீா்மானங்களும்  நிறைவேற்றப்பட்டன.  நிறைவில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT