தஞ்சாவூர்

ஓ.பன்னீர்செல்வம் தில்லி சென்றது ஏன்?: வைத்திலிங்கம் விளக்கம்

24th Jun 2022 05:23 PM

ADVERTISEMENT

ஓ.பன்னீர்செல்வத்தின் தில்லி பயணம் குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் விளக்கமளித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை முடித்து விட்டு தஞ்சை வந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திற்கு தஞ்சை அருகே மேலவஸ்தாச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஒன்றுபட்டு இருக்க வேண்டும். 

கூட்டுத் தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை. பதவிகள் நீடிக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தில்லி சென்றது குடியரத் தேர்தல் வேட்பாளர் மனுத் தாக்கலுக்கு தான். 

இதையும் படிக்க- அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கே.எஸ்.அழகிரி 

ADVERTISEMENT

தேர்தல் ஆணையத்தை சந்திக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கூட்டுத் தலைமைதான் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. கூட்டுத் தலைமை இல்லை என்றால் அப்போது, அது குறித்து தெரிவிக்கிறேன் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT