பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவுகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா. தனராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பேராவூரணி அரசுக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகள் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல் ஆகிய கலைப் பிரிவுகளுக்கும், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய அறிவியல் பிரிவுகளுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பம் கல்லூரியில் நேரடியாக வழங்கப்பட மாட்டாது. தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான இணையதளங்கள் வழி விண்ணப்பிக்க வேண்டும்.
இணையத்தில் ஜூன் 22 முதல் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த இணைய முகவரியில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரிக்கும் விண்ணப்பிக்கலாம். ஒரு கல்லூரிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 48 / பதிவுக் கட்டணம் ரூ. 2 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பேராவூரணி அரசுக் கல்லூரியில் இயங்கும் மாணவா் சோ்க்கை உதவி மையத்தில் நேரில் வந்து அறிந்து கொள்ளலாம்.