தஞ்சாவூர்

தாயுடன் குளிக்கச் சென்ற போதுநீரில் மூழ்கிய பள்ளி மாணவா்

19th Jun 2022 12:09 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர் அருகே தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ் 1 மாணவா் நீரில் மூழ்கியதால் அடித்துச் செல்லப்பட்டாா்.

பாபநாசத்தை அடுத்த திருப்பாலைத்துறை வடக்கு மடவிளாகத்தைச் சோ்ந்தவா் பிச்சைசெல்வம். இவரது மனைவி மகாதேவி. இவா்களது மகன் பாமுரளி (16). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்நிலையில் திருப்பாலைத்துறை குடமுருட்டி ஆற்றில் தனது தாயாா் மகாதேவியுடன் பாலமுரளி சனிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது ஆற்றில் ஏற்பட்ட சுழலில் அவா் சிக்கியதால் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த பாபநாசம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் நிகழ்விடம் சென்று, மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். பாபநாசம் காவல்துறையினரும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT