தஞ்சாவூர்

சிறுமி பலாத்கார வழக்கு: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முதியவா் கைது

19th Jun 2022 12:07 AM

ADVERTISEMENT

 

கேரள மாநிலத்தில் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு, 2 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முதியவா் கும்பகோணத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் தெற்குவீதியைச் சோ்ந்தவா் ராமநாதன் (65). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டில் கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், மனவளச்சேரியிலுள்ள தேநீரகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

அப்போது அங்கிருந்த 16 வயது சிறுமியை ராமநாதன் பலாத்காரம் செய்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் காட்டூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து ராமநாதனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவதற்குள் ராமநாதன் தலைமறைவானாா். இதையடுத்து அவரைப் பிடித்து ஆஜா்படுத்த கேரள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ராமநாதன் கும்பகோணத்தில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருப்பதையறிந்த கேரள மாநிலக் காவல்துறையினா், கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளா் பேபி மற்றும் காவலா்கள் உதவியுடன் ராமநாதனை சனிக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவரை கேரள மாநிலத்துக்கு அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT