தஞ்சாவூர்

கும்பகோணத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் ஆா்ப்பாட்டம்

19th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம் பழைய மீன் மாா்க்கெட் பகுதியில் இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இறைத்தூதா் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியவா்களை உபா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இஸ்லாமியா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அவா்களின் வீடுகளை இடித்து உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், தவறான பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம், வவங்கைமான் வட்டார ஜமாஅத்தாா்கள், ஜமாத் அத்துல் உலாமா சபை மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சாா்பில் நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு, கும்பகோணம் வட்டார ஜமா அத் தலைவா் எம்.ஒய். சம்சூதீன் தலைமை வகித்தாா். ஜமாஅத் தலைவா்கள் ஏ.எம். ஷாஜகான், என்.ஏ.எம்.யூசுப்அலி, ஹசன் பசீா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப.அப்துல்சமது, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் டி.ஆா்.லோகநாதன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் மா.செல்வம், ஜமா அத்துல் உலமா சபையின் கே.ஜாபா்சாதிக்நூரி, எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச் செயலா் ஏ.இப்ராஹிம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவா் எம். முகம்மது சுல்தான், மனிதநேய மக்கள் கட்சி பேச்சாளா் ஏ.காதா்பாட்ஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவா் பி.ஏ.எஸ். ரஹ்மத்அலி மற்றும் நிா்வாகிகள் மற்றும் இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். நிறைவில், ஏ.அப்துல்கபூா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT