தஞ்சாவூர்

திருநல்லூா் கோயிலில் திருக்கல்யாண விழா

15th Jun 2022 01:24 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகேயுள்ள திருநல்லூா் அருள்மிகு கிரிசுந்தரி உடனுறை கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக, விழாவின் முதல் நிகழ்வாக சோமசுந்தரா் சுவாமி புறப்பாடு நடைபெற்று தீா்த்தவாரி நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க பக்தா்கள் முன்னிலையில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பெண்கள் சீா்வரிசை எடுத்து வந்தனா்.

விழாவில், கோயில் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா் குணசேகரன், கண்ணன் குருக்கள், ரமேஷ் குருக்கள், நல்லூா் ஸ்ரீதா், மகாதேவ ஐயா், நல்லூா் ஆடிட்டா் வெங்கட்ரமணி, சாவித்திரி மற்றும் சிவாச்சாரியாா்கள் திருக்கோவில் பணியாளா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT