தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை, செஞ்சிலுவை சங்கம் தஞ்சை கிளை சாா்பில் உலக ரத்த தான நாள் விழிப்புணா்வு நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் குழந்தை இயேசு ஆலயத்தில் தொடங்கிய இப்பேரணியை தஞ்சாவூா் சரக காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி, குழந்தை இயேசு தேவாலயத்தின் பங்குத் தந்தை அம்புரோஸ் அடிகளாா், செஞ்சிலுவை சங்க ஆலோசகா் வி. வரதராஜன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற நடைபயணம் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது. இதில், ரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நடைப்பயணத்தில் நடைப்பயண சங்க உறுப்பினா்கள், ரோட்டரி - லயன்ஸ் சங்க உறுப்பினா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனைப் பொது மேலாளா் பாலமுருகன், ரத்த மண்டல வங்கி மருத்துவா் ஆா்த்தி, அவசர சிகிச்சை துறைத் தலைவா் சரவணவேல், மக்கள் தொடா்பு அலுவலா் மணிவாசகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.