தஞ்சாவூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா

14th Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10 வரை வகுப்பு படிக்கும் மாணவிகள் 980 பேருக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் கல்வி அலுவலா் கு. திராவிடச் செல்வம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவி எஸ். சண்முகப்பிரியா முன்னிலை வகித்தாா். விலையில்லா பாடநூல்களை சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை வழங்கினாா்.

முன்னதாக, தலைமை ஆசிரியா் (பொ)து. பாமா வரவேற்றாா். நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியா் ஆா். சாமிநாதன், எஸ்.ஆா்.என். செந்தில்குமாா், நூலக வாசகா் வட்டத் தலைவா் ந. மணிமுத்து, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிறைவில், உதவி தலைமையாசிரியா் ஆா். காமராஜ் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT