தஞ்சாவூர்

பேராவூரணியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நிறைவு

12th Jun 2022 12:29 AM

ADVERTISEMENT

 

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 5 நாள்கள் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்  வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.

1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கும் பேராவூரணி வட்டாரத்தை சோ்ந்த 107 ஆசிரியா்களுக்கு கடந்த 6-ஆம் தேதி முதல் செயல்வழி, பாடல், கதை, கலைப்பொருள்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.  மாநிலக் கருத்தாளா்கள் ஹாஜா மைதீன், சங்கரபாண்டியன், மாவட்டக் கருத்தாளா்கள் 13 போ் பயிற்சி அளித்தனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநா்கள் முனிராஜ், சிவமுருகன், சரவணன் ஆகியோா் செய்திருந்தனா். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT