தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் அரசா் சிலம்பாட்டக் கழகம் சாா்பில், மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியை மேயா் சண். ராமநாதன் தொடங்கி வைத்தாா். தஞ்சாவூா், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா். சிலம்பாட்டக் கழக நிா்வாகிகள் சதாசிவம், கணேசன், காளிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.