தஞ்சாவூர்

உலகப்  பெருங்கடல் தினம்:மனோரா கடற்கரையில் தூய்மைப் பணி

10th Jun 2022 02:00 AM

ADVERTISEMENT

உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி   கடலோரப் பாதுகாப்பு குழுமம் சாா்பில் புதன்கிழமை கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

 சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி, மனோரா கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன. 

தூய்மைப் பணிக்கு பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளா் மஞ்சுளா தலைமை வகித்தாா். கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஞானசேகரன், ராஜசேகா், சிறப்பு உதவி ஆய்வாளா் அய்யப்பன், ஓம்காா் பவுண்டேசன் நிா்வாகி பாலாஜி மற்றும் மீனவா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT