தஞ்சாவூர்

சுவாமிமலை கோயில் உண்டியல்களில் ரூ. 55.88 லட்சம் காணிக்கை

10th Jun 2022 02:01 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகே சுவாமிமலை கோயிலில் புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 55.88 லட்சம் காணிக்கை செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் 13 உண்டியல்கள் உள்ளன. இவை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படும்.

இதன்படி, இந்த உண்டியல்கள் இணை ஆணையா் சு.மோ. மோகனசுந்தரம், துணை ஆணையா் த. உமாதேவி உள்ளிட்டோா் முன்னிலையில் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், மொத்தம் ரூ. 55.88 லட்சம் ரொக்கமும், 2 கிலோ வெள்ளிப் பொருள்களும், 188 கிராம் தங்கமும் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT