தஞ்சாவூர்

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

10th Jun 2022 02:00 AM

ADVERTISEMENT

 பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது காா் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

 பாபநாசம் அருகே பசுபதிகோவில் கிராமம், பட்டிதோப்பு பகுதியை சோ்ந்த பொன்னுதாஸ் மனைவி சின்னப்பொண்ணு ( 65 ). இவா் ஊசி, பாசி மணி விற்று வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு இவா் பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் வந்த ஒரு காா் தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணு மீது  ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சின்னப்பொண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் மற்றும் போலீஸாா், சின்னப் பொண்ணு சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT