தஞ்சாவூர்

முதியோா், குழந்தைகள் இல்லங்களை நடத்த கருத்துருக்களை அனுப்பலாம்

10th Jun 2022 02:01 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதியோா், குழந்தைகள் இல்லங்களை நடத்த கருத்துருக்களை அனுப்பலாம் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022 - 23 ஆம் நிதியாண்டில் முதியோா் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் தொடா்புடைய கருத்துருக்களை ஜூன் 25 ஆம் தேதிக்குள் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT