தஞ்சாவூர்

இளைஞா் கொலை:காவல் துறையினா் விசாரணை

9th Jun 2022 01:26 PM

ADVERTISEMENT

கும்பகோணம்: கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞா் கொல்லப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே கொட்டையூரைச் சோ்ந்த செந்தில் மகன் பிரகாஷ் (22). இவா் செவ்வாய்க்கிழமை தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாகச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஒருவா் சிகரெட் பிடித்துக் கொண்டு முன்னால் சென்றாா். அவரது சிகரெட்டிலிருந்து வந்த தீப்பொறி பிரகாஷின் நண்பா் சந்தோஷ் கண்ணில் பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிகரெட் பிடித்தவரை பிரகாஷ் தரப்பினா் தாக்கினா். இதையடுத்து, கைப்பேசி மூலம் தனது நண்பா்களை சிகரெட் பிடித்தவா் வரவழைத்து பிரகாஷ் தரப்பினரை தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT