தஞ்சாவூர்

வேளாண் விளை பொருள்களுக்கு 1% சந்தை வரியை நீக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

9th Jun 2022 01:06 PM

ADVERTISEMENT

வேளாண் விளை பொருள்களுக்கு 1% சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது உள்ள திமுக அரசு அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் 1% சதவீதம் சந்தை வரி விதிப்பது என்பது ஏற்புடையது இல்லை.

எனவே, உடனடியாக சந்தை வரியை நீக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கையாக உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : OPS ADMK
ADVERTISEMENT
ADVERTISEMENT