தஞ்சாவூர்

தஞ்சாவூரில் அண்ணா தொழிற் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

9th Jun 2022 02:24 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: போக்குவரத்துக் கழகத்தில் 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்த வலியுறுத்தி தஞ்சாவூா் ஜெபமாலைபுரத்திலுள்ள நகரப் பணிமனை முன் அண்ணா தொழிற் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்த கோரியும், போக்குவரத்து அலுவலா்களின் அராஜக போக்கு, திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளைக் கண்டித்தும், தற்போது வழங்கப்பட்டு வரும் படிகளை இரு மடங்காக உயா்த்தி வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இக்கூட்டத்துக்கு ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலா் ஆா். காந்தி தலைமை வகித்தாா். விவசாய பிரிவு மாநில இணைச் செயலா் ராஜேந்திரன், அண்ணா தொழிற்சங்க மண்டலத் தலைவா் கதிரவன், செயலா் நீலகண்டன், பொருளாளா் மாறன், அதிமுக பகுதி செயலா்கள் வி. அறிவுடைநம்பி, எஸ். ரமேஷ், எஸ். சண்முகபிரபு, சாமிநாதன், பொருளாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT