தஞ்சாவூர்

புத்தூா் ஸ்ரீ வல்லப கருப்புசாமி கோயில் கும்பாபிஷேக விழா

6th Jun 2022 01:49 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், புத்தூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ வல்லப கருப்புசாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புத்தூா் மேற்கிலுள்ள இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்து, சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டது.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து மேளதாளங்கள் முழங்க கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

விநாயகா், முருகன், அய்யனாா், சங்கிலிக்கருப்பு, ஆரியகாத்தான், நாகப்பன், வீரன், லாட சன்னியாசி, காமாட்சியம்மன், வடுவச்சி அம்மன், பேச்சியம்மன் சப்தகன்னியா், ஒரு தலை நாகம் சாம்பான் முதலான பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா தீபாராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT