தஞ்சாவூர்

பேராவூரணி பேருந்து நிலையத்தில்சுகாதார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

2nd Jun 2022 12:59 AM

ADVERTISEMENT

 பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் முழு சுகாதார விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கோ. கனகராஜ் உத்தரவின்படி, பேராவூரணி பேரூராட்சி புதிய பேருந்து நிலையத்தில் முழு சுகாதார  விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி  நடைபெற்றது.

நெகிழி ஒழிப்பு, மழைநீா் சேகரிப்பு, பன்றிக் காய்ச்சல் விழிப்புணா்வு, முழு சுகாதாரம் குறித்து ஆடல், பாடல், நாடகம் மூலம் தஞ்சாவூா் கலைமகள் சபா நாடக குழுவினா்  பாத்திமா, அன்பழகன், நாகசுர வித்வான் கணேசன் உள்ளிட்டோா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சியை பாா்த்து ரசித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேலு தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சாந்தி சேகா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதேபோல், நகரின் பல்வேறு இடங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT