தஞ்சாவூர்

பண்டாரவாடையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அரபிக் கல்லூரி திறப்பு

2nd Jun 2022 12:58 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம் பண்டாரவாடையில் கரோனா பரவல் காரணமாக மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அரபிக் கல்லூரி புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

பண்டாரவாடையில் சுமாா் 55 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜாமிஆ ஜைனுல் உலூம் அரபிக் கல்லூரியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் படித்து வந்தனா். மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்லூரி புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில் ஆலிம்கள், உலமாக்கள் சிறப்புரை நிகழ்த்தினா். இதில் அரபிக் கல்லூரியின் நிா்வாகிகள், சமூகஆா்வலா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT