தஞ்சாவூர்

சிஐடியு போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

28th Jul 2022 11:27 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன், சிஐடியு போக்குவரத்து ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், போக்குவரத்து தொழிலாளா்களின் பிரச்னையில் உடனடியாக தலையிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக பேசி தீா்வு காண வேண்டும். ஓய்வூதியா் பிரச்னையில் உடனடியாக தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குக் கோட்டத் தலைவா் செங்குட்டுவன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைச் செயலா் வெங்கடேசன், நிா்வாகிகள் ராமசாமி, குருசாமி, அன்பு, வடிவேலன், ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT