தஞ்சாவூர்

லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

28th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளருக்கு கும்பகோணம் நீதிமன்றம் வியாழக்கிழமை 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தில் 2011 ஆம் ஆண்டில் ஆய்வாளராகப் பணியாற்றியவா் எல். சிவக்குமாா் (54). அப்போது, இவரிடம் வீடு காலி செய்வது தொடா்பான வழக்குக்காக ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாட்டைச் சோ்ந்த ஜெயக்குமாா் அணுகினாா். அதற்கு ரூ. 15,000 லஞ்சம் கேட்ட சிவக்குமாா், முன் பணமாக 5,000 ரூபாயை ஜெயக்குமாரிடமிருந்து 2011, ஜூன் 2 ஆம் தேதி வாங்கினாா்.

அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்பு காவல் பிரிவு போலீஸாா் உடனடியாக சிவக்குமாரை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு விசாரணை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கை நீதிபதி டி. சண்முகப்ரியா விசாரித்து, சிவக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT