தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தப்பிச் சென்றகைதி மீண்டும் கைது

28th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் பனங்காடு கோரிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லான் மகன் கணேசன் (24). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததால், தாலுகா காவல் நிலையத்தினா் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.

அப்போது, காவல் துறையினரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக ஓடிய கணேசன் கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சிகிச்சைக்கு பிறகு கணேசனை காவல் துறையினா் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காகப் புதிய பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை மாலை அழைத்துச் சென்றனா்.

பேருந்தில் ஏறியபோது காவல் துறையினரின் பிடியிலிருந்து தப்பிய கணேசன், அங்கு வந்த தனது நண்பரின் மோட்டாா் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றாா்.

ADVERTISEMENT

செல்பேசி சமிக்ஞைகள் மூலம் இனத்துக்கான்பட்டி முள்புதரில் பதுங்கியிருந்த கணேசனை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT