தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் கலாம் நினைவு நாள்

27th Jul 2022 11:42 PM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டை பாளையம் குருமாக்குளம் நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு புதன்கிழமை பள்ளிக்கு மரக்கன்றுகள், மாணவ , மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்துல் கலாம் மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை உமாராணி தலைமை வகித்தாா். நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் மாஸ்கோ முன்னிலை வகித்தாா். மரக்கன்றுகள் நோட்டு, பேனாக்களை வழங்கி பட்டுக்கோட்டை கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் மணிமுத்து புகழ்அஞ்சலி செலுத்தினாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராதிகா, வீரபாண்டியன், மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்துல் கலாம் மன்றத் தலைவா் இந்திரஜித் வரவேற்றாா், ஆசிரியா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT