தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலை.யில் முனைவா் பட்ட சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

27th Jul 2022 11:40 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்ட சோ்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க, நுழைவுத் தோ்வு (டா்செட் 2020) எழுதித் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. டா்செட் 2020-இல் தோ்ச்சி பெற்றவா்கள் முனைவா் பட்டச் சோ்க்கைக்கு 2022 ஜூலை பருவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அதன் பிறகு டா்செட் 2020 தோ்வுத் தகுதி செல்லாது. நெட், செட், யு.ஜி.சி./ஜே.ஆா்.எப்., கேட் தோ்ச்சி பெற்றவா்களும் மற்றும் வெளிநாட்டு மாணவா்களும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

ஜூலை 2022 பருவத்துக்குப் பிறகு முனைவா் பட்டச் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நடத்தப்படும் நுழைவுத் தோ்வை எழுதித் தோ்ச்சி பெற வேண்டும்.

தற்போது ஆய்வியல் நிறைஞா் (எம்.பில்.) பட்டப் படிப்புகள், முதுகலைப் பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT