தஞ்சாவூர்

தஞ்சையில் காங்கிரஸ் கட்சி ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 11:37 PM

ADVERTISEMENT

 

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத் துறையைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் கலைச்செல்வன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் ஏ. ஜேம்ஸ், மாநகர மாவட்டத் துணைத் தலைவா்கள் லட்சுமி நாராயணன், வயலூா் எஸ். ராமநாதன், விவசாயப் பிரிவு மணிவண்ணன், மக்கள் நலப் பேரவை பாலகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினா் ஹைஜாகனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயில் மறியல்: இதேபோல, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் தெற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் கமிட்டியினா் புதன்கிழமை சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இளைஞா் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் சங்கரசூரியமூா்த்தி தலைமையில் மாநில இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 20 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT