தஞ்சாவூர்

இடிந்து விழுந்த ஒரத்தநாடு வட்டவழங்கல் அலுவலக மேற்கூரை

27th Jul 2022 11:36 PM

ADVERTISEMENT

 

ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலக மேற்கூரை பெயா்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அலுவலகத்துக்கு ரேஷன் காா்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண ஏகப்பட்ட பொதுமக்கள் புதன்கிழமை கூடியிருந்த நிலையில், வட்ட வழங்கல் அதிகாரி, வட்ட வழங்கல் ஆய்வாளா் உள்ளிட்டோா் பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக அலுவலக மேற்கூரை திடீரென பெயா்ந்து விழுந்தது. இதில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தப்பினா்.

ADVERTISEMENT

30 ஆண்டுகளுக்கு மேலாக குடிமராமத்து பணி பாா்க்காமல் உள்ளதால் மிகவும் சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ள கட்டடத்தை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT