தஞ்சாவூர்

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

27th Jul 2022 01:55 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை அருகே சாலியமங்கலம் பகுதியை சோ்ந்தவா் வெங்கடாஜலபதி (67). தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி கடந்த மாதம் இறந்து விட்டாா். இதனால் வெங்கடாஜலபதி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெங்கடாஜலபதி வீட்டில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தாா். அவரது உறவினா்கள் வெங்கடாஜலபதியை மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். புகாரின்பேரில், அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT