தஞ்சாவூர்

மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

27th Jul 2022 01:59 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு, தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் மாவட்டக்குழு உறுப்பினா் அருள் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் காளியப்பன், மாவட்டசெயலாளா் தேவா, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் இணைச் செயலாளா் இராவணன், எழுத்தாளா் தஞ்சை சாம்பான் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT