தஞ்சாவூர்

ஆம்னி பேருந்து-கார் மோதிய விபத்தில் பெண் பலி

6th Jul 2022 06:11 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர்: சென்னையில் இருந்து தஞ்சை வந்த தனியார் சொகுசு பேருந்து, தஞ்சாவூர் கும்பகோணம் சாலை குருவாடி அருகே வந்து கொண்டிருக்கும் போது, திருச்சியில் இருந்து திருக்கடையூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோதியதில் கார் நிலைத் தடுமாறி அருகே இருந்த பாலகட்டையின் மீது மோதி சாய்ந்து நின்றது. 

இதில்  கார் பலத்த சேதமடைந்ததோடு காரில் பயணம் செய்த பாக்கியலட்சுமி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் காரில் 6 பேர் பயணம் செய்த நிலையில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். 

அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்ததையடுத்து, விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் படுகாயம் அடைந்தவர்களை தஞ்சை மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்துச் சென்றனர். 

மேலும் தகவல் அறிந்து வந்த தஞ்சை வட்ட காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருவாடி பகுதி சாலை சரியில்லாத காரணத்தினாலும் வளைவுகள் அதிகம் உள்ள பகுதினாலும் அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமாகவே உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT