தஞ்சாவூர்

காா் மீது ஆம்னி பேருந்து மோதல்: திருச்சியைச் சோ்ந்த மூதாட்டி பலி

6th Jul 2022 11:39 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காலை காா் மீது ஆம்னி பேருந்து மோதியதில் திருச்சியைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

திருச்சி அருகே பிச்சாண்டாா் கோவில் ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் ஜவகா்லால் நேரு. இவா் புதன்கிழமை காலை தனது மனைவி பாக்கியராணி (65), மகன், மருமகள், பேர குழந்தைகள் என மொத்தம் 6 பேருடன் காரில் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் அருகே நெடாா் பகுதியில் சென்ற இந்த காா் மீது எதிரே சென்னையிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாக்கியராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜவகா்லால் நேருவும், அவரது மகனும் காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மற்றவா்கள் லேசான காயத்துடன் முதலுதவி சிகிச்சை பெற்றனா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT