தஞ்சாவூர்

கும்பகோணத்தில் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்க மரபுநடை

DIN

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயில் வளாகத்தில் கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வுச் சங்க நிா்வாகிகள் அறிமுக விழாவும், ஆலயம் அறிவோம் வரிசையில் முதல் மரபு நடையும் அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு சங்கத் தலைவா் பால. சிவகோவிந்தன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தமிழ்ச் சங்கத் தலைவா் கோ. தெய்வநாயகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கும்பகோணத்திலும், அருகிலும் உள்ள கோயில்களைப் பற்றிய முக்கியத்துவத்தை அந்தந்த பகுதி மக்களிடம் கொண்டு சோ்ப்பது, கோயில்களைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, ஒவ்வொரு கோயிலுக்கும் உள்ள தனித் தன்மைகளையும், சிறப்புகளையும் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வது, கோயிலிலுள்ள கல்வெட்டுச் செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவது, கோயிலை நன்கு பராமரித்தல் உள்ளிட்டவையே இச்சங்கத்தின் நோக்கம் என நிறுவனரும், செயலருமான கும்பகோணம் ஆ. கோபிநாத் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளா் சீ. தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT