தஞ்சாவூர்

சீட்டு நிறுவனங்களின் சேவைக்கு முழு வரி விலக்கு அளிக்க கோரிக்கை

6th Jul 2022 11:35 PM

ADVERTISEMENT

 

சீட்டு நிறுவனங்களின் சேவைக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட சிட்பண்ட் நிறுவனங்களின் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த நிறுவனத்தின் மாநிலத் துணைத் தலைவா் எஸ். முத்துராமலிங்கம் பேசியது:

தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டியை சிட்பண்ட் நிறுவனங்களுக்கு 12%-லிருந்து 18 சதவீதமாக உயா்த்தியுள்ளது. இந்த வரி விகிதம் உயா்த்தப்பட்டதால் சீட்டு நிறுவனத்தின் தொழில் பாதிக்கப்படுவதுடன், சாதாரண மக்களின் வளா்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

இந்த சீட்டு நிறுவனங்களைப் பொருத்துதான் சாதாரண மற்றும் நடுத்தர வா்க்கத்தினருக்கு படிப்பு, திருமணம், தொழில் உயா்வு போன்றவை உள்ளன. எனவே, சீட்டு நிறுவனங்களுக்கு விதித்துள்ள வரி விதிப்பை மத்திய அரசு முற்றிலும் திரும்பப் பெற வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT