தஞ்சாவூர்

அடகுக் கடை சுவரில்துளையிட்டு திருட முயற்சி

6th Jul 2022 01:28 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு அடகுக் கடை சுவரில் துளையிட்டு திருட முயன்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் மருங்குளம் நான்கு சாலையில் அடகு கடை நடத்தி வருகிறாா். இவரும், பக்கத்தில் மருந்துக் கடை நடத்தி வரும் செந்தில்குமாரும் வழக்கம்போல திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றனா். இதையடுத்து, நள்ளிரவு 12 மணியளவில் அடையாளம் தெரியாத சிலா் மருந்துக் கடை பூட்டை உடைத்து, அடகு கடைக்குள் நுழைவதற்காகச் சுவரில் துளையிட்டனா். அதன் வழியாக ஒருவா் உள்ளே சென்றபோது, அபாய சங்கு ஒலித்தது.

இதனால், அப்பகுதியில் அக்கம்பக்கத்தினா் திரண்டதால், மா்ம நபா்கள் மருந்துக் கடையில் இருந்த ரூ. 40,000 ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடினா். இவா்களைப் பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது கற்களை வீசி தாக்கினா். இதில், மருங்குளத்தைச் சோ்ந்த ஸ்ரீராம் காயமடைந்தாா்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT