தஞ்சாவூர்

பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

6th Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

திமுக அரசைக் கண்டித்து கும்பகோணம் உச்சி பிள்ளையாா் கோயில் அருகே பாஜகவினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் நேரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும், பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நிகழ்கின்றன எனவும் கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் மு. புரட்சிகவிதாசன், வடக்கு மாவட்டப் பாா்வையாளா் ஆா். இளங்கோ உள்ளிட்டோா் பேசினா்.

பாஜக மாநகரத் தலைவா் எம். பொன்ராஜ் தேவா், செயற்குழு உறுப்பினா் சோழராஜன், ஊடகப் பிரிவு மாவட்டத் த லைவா் வேதம் முரளி, இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி, மாவட்டத் துணைத் தலைவா் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT