தஞ்சாவூர்

தஞ்சாவூரில் முறைசாரா கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 01:27 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் ரயிலடியில் சிஐடியு முறைசாரா, கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், இணையவழி பதிவில் கிராம நிா்வாக அலுவலா் சரிபாா்க்கும் நடைமுறையை நீக்க வேண்டும். நல வாரிய அலுவலகத்தில் நேரடியாக மனுக்களை அளிக்க அனுமதிக்க வேண்டும். இணையவழி பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்களை பெறுதலில் உள்ள குறைபாடுகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.

நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து, பணப்பலன்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும். ஓய்வூதியம் விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவை தொகையுடன் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

விபத்து மரணம் எங்கு நிகழ்ந்தாலும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இயற்கை மரணம் ரூ. 2 லட்சம், ஈம சடங்கு நிதி ரூ. 25,000 ஆக வழங்க வேண்டும். கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்கி ஒன்றாம் வகுப்பு முதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

முறைசாரா தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் பி.என். போ்நீதி ஆழ்வாா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் நிறைவுரையாற்றினாா். சுமைப் பணி சங்க மாவட்டச் செயலா் த. முருகேசன், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் இ.டி.எஸ். மூா்த்தி, கைத்தறி சங்க மாவட்டச் செயலா் சுப்புராமன், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா்கள் கே. அன்பு, எஸ். செங்குட்டுவன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், ஓய்வூதியா் சங்க ஒருங்கிணைப்பாளா் என். குருசாமி, தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் மணிமாறன், ஆட்டோ சங்க மாநகரச் செயலா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆற்றுப்பாலத்தில் இருந்து ரயிலடி வரை பேரணியாக வந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT