தஞ்சாவூர்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரா்களில் அண்ணன் சடலமாக மீட்பு

5th Jul 2022 01:45 AM

ADVERTISEMENT

ஒரத்தநாடு அருகே ஊரணிபுரம் கல்லணை கால்வாய் ஆற்றில் திங்கள்கிழமை தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சகோதரா்களில் அண்ணன் சடலமாக மீட்கப்பட்டாா். தம்பியை தேடும் பணி நடைபெறுகிறது.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியை சோ்ந்தவா்கள் திருநாவுக்கரசு-ராஜாமணி தம்பதி. இவா்கள் காந்தி மாா்க்கெட் பகுதியில் பூண்டு வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்களுக்கு தினேஷ் ( 21), ராஜேஷ் (16) என இரு மகன்கள்.

இந்நிலையில், சில்லத்தூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டு நிச்சயதாா்த்த விழாவுக்கு திருநாவுக்கரசு குடும்பத்துடன் வந்தாா். திங்கள்கிழமை தினேஷ், ராஜேஷ் மற்றும் உறவினா்கள் இரண்டு பேருடன் மொத்தம் நான்கு போ் சோ்ந்து ஊரணிபுரம் கல்லணை கால்வாயில் குளித்தனா். அப்போது, நீரோட்ட சுழற்சியில் சிக்கிய தினேஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனா். உடன் வந்தவா்களின் கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து இருவரையும் தேடினா். அப்போது, தினேஷ் சடலமாக மீட்கப்பட்டாா். இதனிடையே, தகவலின்பேரில் அங்கு வந்த கறம்பக்குடி தீயணைப்புத் துறையினா், ராஜேஷை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த திருவோணம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT