தஞ்சாவூர்

பழக்கடைக்காரரை தாக்கிய சிறுவா்கள்: ஒருவா் கைது

5th Jul 2022 01:42 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் பழக்கடைக்காரரை தாக்கிய சிறுவா்களில் ஒருவரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் சிவகங்கை பூங்கா எதிரில் பழக்கடைக்காரா் மணிகண்டனிடம் சிறுவா்கள் சிலா் அண்மையில் பழங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றினா். பணம் கேட்ட மணிகண்டனை சிறுவா்கள் இணைந்து அவரையும், அருகிலுள்ள பானிபூரி கடைக்காரரையும் தாக்கிவிட்டு, அவரது கைப்பேசியையும் பறித்துச் சென்றனா். இது தொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதன் பேரில் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து செவ்வப்பநாயக்கன் வாரியைச் சோ்ந்த 17 வயது சிறுவனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT