தஞ்சாவூர்

கல்வித்துறையில் காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வலியுறுத்தல்

DIN

கல்வித்துறை காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்று, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டணியின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், 2022 ஜனவரி முதல் உயா்த்தப்பட்ட அகவிலைப்படி உயா்வு 3 சதவிகிதத்தை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா் ஊதியத்தை உடனடியாக சரி செய்து, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியா்களுக்கு நிகராக, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். கல்வித் துறைக் காலிப் பணியிடங்களைத் தற்காலிக பணியிடங்களாக நிரப்பாமல், நிரந்தரப் பணியிடமாக காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு கூட்டணியின் மாவட்டத் தலைவா் க. அருள் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் க. கணேசன், செயற்குழு உறுப்பினா் ச. துரைப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினா்கள் ஆ. பாஸ்கா், கு. சகிலா, மாவட்டச் செயலா் சுப. குழந்தைசாமி, பொருளாளா் நாகராஜன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT