தஞ்சாவூர்

மாற்றுத் திறனாளிகளுக்காக ஜூலை 7-இல்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

4th Jul 2022 12:11 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூரில் மாற்றுத் திறனாளிகளுக்காக ஜூலை 7- ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், வேலைதேடும் இளைஞா்களுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

சிறப்பு நோ்வாக மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 7-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் தஞ்சாவூா் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், டா்னா், பிட்டா் மற்றும் டிப்ளமா மெக்கானிக்கல் படித்த தஞ்சாவூா் மற்றும் அதனை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளி மனுதாரா்கள் கலந்து கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆள்களை முகாமில் நேரடியாகத் தோ்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களுடைய சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT