தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

4th Jul 2022 12:10 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகிலுள்ள முத்துபிள்ளை மண்டபம் ஐஸ்வா்யா நகரைச் சோ்ந்தவா் த. சின்னதம்பி (42). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் அருகே முருங்கை மரத்திலுள்ள கிளையை வெட்டினாா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற உயரழுத்த மின் கம்பியில் மரக்கிளை உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT