தஞ்சாவூர்

சாக்கோட்டை ஊராட்சியில் 25 பேருக்கு பட்டா

4th Jul 2022 12:10 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சியிலுள்ள கோ.சி. மணி நகரில் 25 பேருக்கு பட்டா வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

கும்பகோணம் தொகுதிக்குள்பட்ட சாக்கோட்டை ஊராட்சி, கருப்பூா் கிராமம் கோ.சி. மணி நகரில் 25 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கில் வசிக்கும் 25 குடும்பத்தினா் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகனிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன் வருவாய்த் தீா்வாயத்தில் சாக்கோட்டை ஊராட்சி கோ.சி. மணி நகரில் 25 பேருக்கு பட்டா வழங்க கோரிக்கை விடுத்தாா். இதன்படி, தஞ்சாவூா் கூடுதல் ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா பட்டா மனுக்களை பரிசீலனை செய்து, உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து கோ.சி.மணி நகரில் பொதுமக்களிடம் பட்டா வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற

விழாவில் 25 பேருக்கு கூடுதல் ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா பட்டா வழங்கினாா்.

இவ்விழாவில் வட்டாட்சியா் ஆா். தங்க பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் தி. கணேசன், பெருமாண்டி ஊராட்சித் தலைவா் ஆா்.கே. பாஸ்கா், மாவட்டப் பிரதிநிதி டி.என். கரிகாலன், ஊராட்சித் தலைவா் அ. செல்லப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT