தஞ்சாவூர்

சென்னை உள்ளிட்ட இடங்களில் உச்ச நீதிமன்ற கிளையைத் தொடங்க வலியுறுத்தல்

3rd Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

 

சென்னை உள்ளிட்ட இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளையைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த இயக்கத்தின் கொள்கை அறிக்கை வெளியீட்டு விழா பேராவூரணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் தங்க. குமரவேல் தலைமை வகித்தாா்.

தமிழ்வழிக் கல்வி இயக்கத் தலைவா் அ. சி. சின்னப்பத்தமிழா்

ADVERTISEMENT

அறிக்கையை வெளியிட கவிஞா் கே.கே.எம். மது பெற்றுக் கொண்டாா். இயக்கத்தின் அரசியல் செயலா் ஆ. ஜீவானந்தம் கொள்கை விளக்க உரையாற்றினாா். 

விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னை, மும்பை, கொல்கத்தாவில் உச்ச நீதிமன்றக் கிளையைத் தொடங்க வேண்டும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் குடியிருப்போா் உள்ளிட்ட அனைவரும் ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பா. பாலசுந்தரம், வ. ராஜமாணிக்கம், எஸ். ஜெயராஜ், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் மெய்ச்சுடா் வெங்கடேசன், த. பழனிவேலு, திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளா் சித. திருவேங்கடம், பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழகத்தின் அனல் ரவீந்திரன்,

அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலா் ஆயா் த. ஜேம்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT