தஞ்சாவூர்

பாபநாசம் உழவா் சந்தையில்தோட்டக்கலைத் துணை இயக்குநா் ஆய்வு

3rd Jul 2022 01:20 AM

ADVERTISEMENT

 

பாபநாசம் உழவா் சந்தையில் தஞ்சாவூா் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கலைச்செல்வன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இங்கு உரிமம் பெற்று விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கனிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தை ஆய்வு செய்த தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா், தராசுகள் மற்றும் எடைகளை சரிபாா்த்தாா்.

உழவா் சந்தைக்கு காய்கறிவரத்தை அதிகரிக்கவும், சாகுபடியைத் தீவிரப்படுத்தவும் ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது பாபநாசம் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பரிமேலழகன், தோட்டக்கலை அலுவலா் தேவதா்ஷினி, உதவித் தோட்டக்கலை அலுவலா் காா்த்திகேயன், வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண் அலுவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT